அமர்சிங், ஜெயப்பிரதா சமாஜ்வாடிக் கட்சியிலிருந்து நீக்கம்

கட்சி விரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாலும், கட்சியின் இமேஜை கெடுக்கும் வகையில் செயல்பட்டு வந்ததாகவும் கூறி இருவரும் நீக்கப்பட்டுள்ளனர்.
கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் தலைமையில் இன்று லக்னோவில் நடந்த கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான மோகன் சிங் கூறுகையில், இருவரும் கட்சி விரோத நடவடிக்கை காரணமாக நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும், எம்.எல்.ஏக்கள் மதன் செளகான், சந்தீப் அகர்வால், அசோக் சன்டல், சர்வேஸ் சிங் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாத காலமாக இந்த தலைவர்கள், சமாஜ்வாடிக் கட்சிக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வந்தனர்.
ஜனவரி 31ம் தேதி ஜெயப்பிரதா நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தின்போது கட்சித் தலைமைக்கு எதிராக அநாகரீகமான முறையில் பேசிநார். கட்சியின் கொள்கைளை கடுமையாக விமர்சித்தார்.
மேலும் கல்யாண் சிங்குக்கு ஆதரவாகவும் அவர் பேசினார். இது கட்சியின் மதச்சார்பற்ற தன்மைக்கு முற்றிலும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் செயலாகும் என்றார்.












Click it and Unblock the Notifications