சென்னை விமானத்தில் பறவை மோதியது: 50 பயணிகள் தப்பினர்
கொல்கத்தா: கொல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட விமானம் மீது பறவை மோதியது.
விமானத்திற்கு எவ்வித சேதமும் இன்றி உடனடியாக தரையிறக்கப்பட்டதால் 50 பயணிகள் தப்பினர்.
கொல்கத்தா என்எஸ்சி போஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பாரமவுன்ட் ஏர்லைன்ஸ் விமானம் 50 பயணிகளுடன் நேற்று சென்னை நோக்கி புறப்பட்டது.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பகல் 1.35 மணிக்கு நடுவானில் விமானத்தின் மூக்கு பகுதியில் பறவை ஒன்று மோதியது.
உடனடியாக விமானி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, தரையிறங்கவதற்கான உஷார் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
பின்னர் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டு அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு விமானம் புறப்பட்டுச் சென்றது. இதில் விமானத்துக்கோ, பயணிகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.












Click it and Unblock the Notifications