ஒருமாதத்துக்கு பின் நீதிமன்றத்துக்கு வந்தார் நீதிபதி தினகரன்!
பெங்களூர்: நில ஆக்கிரமிப்புப் புகாரில் சிக்கியுள்ள கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.டி.தினகரன் நேற்று நீதிமன்றத்துக்கு வந்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி தினகரன் மீது நில ஆக்கிரமிப்பு புகார் உள்ளது. இதன்காரணமாக உச்சநீதிமன்றத்தில் அவருக்கு கிடைக்க இருந்த பதவி உயர்வும் தடைபட்டது.
இதையடுத்து மாநிலங்களவையில் அவர் மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையி்ல் தினகரன் கடந்த மாதம் முதல் நீதிமன்றப் பணிகளை மேற்கொள்ளாமல் இருந்தார்.
கடந்த டிசம்பர் 25ம் தேதி முதல் அவர் கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு வராமலும், நீதிமன்ற அலுவல்களில் பங்கேற்காமலும் இருந்தார். குடியரசு தினத்தன்று கூட மூத்த நீதிபதி கோபால கவுடாவே கொடியேற்றினார்.
இந்நிலையில், நேற்று பிற்பகல் தினகரன் உயர்நீதிமன்றத்துக்கு வந்தார். அவரது அறையில் அமர்ந்து நிர்வாகப் பணிகளை கவனித்தார். எனினும் வழக்கு விசாரணை எதையும் மேற்கொள்ளவில்லை.












Click it and Unblock the Notifications