கல்வி நிதிக்கழகம் உருவாக்க மத்திய அரசு திட்டம்!

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: உயர்கல்வியில் ஆர்வமுள்ள, பொருளாதார வசதியற்ற ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் கல்வி நிதிக் கழகம் அமைப்பது குறித்து மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில்சிபல் தெரிவித்தார்.

கான்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் கபில்சிபல் நிருபர்களிடம் பேசியபோது இதுபற்றி கூறுகையில்,

'நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உயர்கல்வி பயிலும் ஆர்வத்துடனும், போதுமான தகுதியுடனும் உள்ள மாணவர்களுக்கு பொருளாதார வசதி இல்லாத சூழல் நிலவுகிறது.

அத்தகைய மாணவர்கள் உயர்கல்வி பெற வேண்டும் என்பதற்காக கல்வி நிதிக் கழகம் என்ற பிரத்தியேக அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து திட்டக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டு, அதன் ஒப்புதலையும் பெற்றாகி விட்டது. இதைத் தொடர்ந்து கழகம் அமைப்பதற்கான இறுதி முடிவை அரசு விரைவில் மேற்கொள்ளும்.

நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் இன்னும் ஏராளமாக உருவாக வேண்டிய அவசியம் உள்ளது.

குறிப்பாக கீழ்தட்டு மக்கள் மத்தியிலும், பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கும் தரமான கல்வி சென்று சேர வேண்டும்.

தேவையானவர்களுக்கு, தரமான கல்வியை வழங்குவதற்கான உறுதியை அளித்தால் தனியார் நிறுவனங்கள் அரசுடன் சேர்ந்து இதற்கான முயற்சியில் ஈடுபட வரவேற்கப்படுகின்றன' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+