ஆந்திராவில் பயங்கரம்: தொழில் போட்டியில் சிறுமி கடத்திக் கொலை-அதிர்ச்சியில் தந்தை சாவு

Subscribe to Oneindia Tamil

Nagavaishnavi
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தொழில் போட்டி காரணமாக ஒரு தொழிலதிபரின் 10 வயது மகள் கடத்திக் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இதை அறிந்த அந்தத் தொழிலதிபர் அதிர்ச்சியில் மரணமடைந்தார்.

ஆந்திராவில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வியவாடாவைச் சேர்ந்தவர் பலகானி பிரபாகர ராவ். ரியல் எஸ்டேட், நிதி, மது உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். இவரது மகள் நாக வைஷ்ணவி. 10 வயதான நாக வைஷ்ணவியை தொழில் போட்டி காரணமாக சிலர் கடத்திச் சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபாகர ராவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், நாக வைஷ்ணவி, நேற்று மாலை குண்டூர் அருகே உள்ள ஒரு பாய்லரில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

சனிக்கிழமை அவரை மூன்று பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது. வைஷ்ணவி பயணித்த காரை தடுத்து நிறுத்தி டிரைவரைக் கொலை செய்து விட்டு சிறுமியை அந்தக் கும்பல் கடத்திச் சென்றது.

அந்தக் காரில் இருந்த பிரபாகர ராவின் 14 வயது மகன் சாய் தேஜேஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.

சிறுமியை விஜயவாடா போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் பிணமாகவே அவர் கண்டெடுக்கப்பட்டார்.

பாய்லரில் உடல் முழுவதும் பொசுங்கிப் போன நிலையில் வைஷ்ணவியின் உடல், எலும்புக் கூடாகப் போய் விட்டது. கடத்திய சில மணி நேரங்களிலேயே சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்தக் கொடூரக் கொலைச் செய்தி ஆந்திராவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் இன்று காலை இச்செய்தியை அறிந்த பிரபாகர ராவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து முதல்வர் ரோசய்யா அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். குற்றவாளிகளை காவல்துறை சும்மா விடாது. நிச்சயம் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என அவர் கூறியுள்ளார். மேலும், இந்த வழக்கின் விசாரணையை துரிதமாக மேற்கொண்டு குற்றவாளிகளை விரைவாக பிடிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த கொலை வழக்கை துரிதமாக விசாரித்து விரைவில் தீர்ப்பு வழங்குவதற்கு வசதியாக தனி கோர்ட் அமைக்கப்படும் என உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டியும் தெரிவித்துள்ளார்.

பிரபாகர ராவுக்கு 2 மனைவிள். முதல் மனைவி வெங்கடேஸ்வரம்மா. இவருக்கு ஒரு மகன் உள்ளார். 2வது மனைவிக்குப் பிறந்த குழந்தைகள்தான் நாக வைஷ்ணவியும், சாய் தேஜேஷும்.

முதல் மனைவியை விட்டு பிரபாகர ராவ் பிரிந்து 2வது மனைவியுடன் வசித்து வந்தார். முதல் மனைவிக்குப் பிறந்த மகனும், இவர்களுடனேயே வசித்து வருகிறார்.

மைத்துனரே காரணம்..

இதற்கிடையே, இந்தக் கொடூரக் கொலை தொடர்பாக பிரபாகர ராவின் முதல் மனைவியின் சகோதர வெங்கட்ராமை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரே கொலையைச் செய்ததாக தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தனது அக்காவை ஒதுக்கி வைத்து விட்டு 2வது மனைவியுடன் பிரபாகர ராவ் வசித்து வந்ததாலும், சாராயத் தொழிலில் பெருமளவில் அவர் பணம் குவித்து வந்ததாலும் ஆத்திரமடைந்து அவரது மகளைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக தெரிகிறது.

பிரபாகர ராவுக்கு மகள் மீது நிறைய பாசம் உண்டு. மகள் பிறந்த பிறகுதான் தான் பெரும் செல்வந்தராக உயர்ந்ததாக அவர் கூறி வருவார். எனவேதான் மகனை விட்டு விட்டு மகளை மட்டும் கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர்.

முன்பே ஒருமுறை வைஷ்ணவியைக் கடத்திச் சென்றுள்ளனர். அப்போது பெரும் பணத்தைக் கொடுத்து மகளை மீட்டார் பிரபாகர ராவ். இப்போதும் கூடம் பணத்தைக் கொடுக்கிறேன். மகளை கொடுத்து விடுங்கள் என்று கண்ணீர் மல்க அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஒரு கோடி ரூபாய் கூட கொடுக்க தயாராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+