சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்!

இந்தோனேசியாவின் ஜகார்தா நகருக்கு அருகே பெகாசி என்ற ஊரைச் சேர்ந்தவர் ஆண்டி சுசான்டோ. வயது 31.
பள்ளிப் பருவம் முதலே சிகரெட் புகைக்கும் பழக்கம் கொண்ட இவர், கடந்த வியாழன் கிழமை அன்று வழக்கம் போல சிகரெட் பற்றவைத்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது திடீரென சிகரெட் வெடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை முடிவில் சுசான்டோ தனது ஆறு பற்களை இழந்துள்ளார். வாயின் பல்வேறு இடங்களிலும் மொத்தம் 51 தையல்கள் போடப்பட்டுள்ளன.
இதுகுறித்து சுசான்டோ கூறுகையில், 'எப்போதும் நான் சிகரெட் புகைக்கும் போது பிரச்னை ஏற்பட்டதில்லை.
ஆனால் கொஞ்சமும் எதிர்பாராத விதத்தில் அன்றைய தினம் அசம்பாவிதம் நடந்துவிட்டது. சிகரெட் எப்படி வெடித்தது என தெரியவில்லை' எனக் கூறினார்.
இந்த அசம்பாவிதத்துக்கு பொறுப்பேற்று சிகரெட் தயாரித்த நிறுவனம் தங்களுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று சுசான்டோவின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஆனால் சம்பந்தப்பட்ட சிகரெட் நிறுவனம் தங்கள் தயாரிப்பில் ஒருபோதும் வெடிப் பொருட்கள் இருக்க வாய்ப்பில்லை என்று தெளிவாக கூறிவிட்டது.
சிகரெட் வெடிப்பு எப்படி நடந்தது என்பதை கண்டுபிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications