ஈழம்: பிரிட்டன் வாக்கெடுப்பு- நிராகரித்தது இலங்கை
கொழும்பு: ஈழம் தொடர்பாக பிரிட்டனில் தமிழர்களிடையே நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பின் முடிவை இலங்கை நிராகரித்துவிட்டது.
பிரிட்டனில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 64,692 பேர் பங்கேற்றனர். இவர்களில் 64,256 பேர் ஈழத்துக்கு ஆதரவாகவும், 185 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். 251 பேர் வாக்குகள் செல்லாதவே என அறிவிக்கப்பட்டது.
இந்த வாக்கெடுப்பு குறித்து இலங்கை அமைச்சர் கெஹிலியா ரம்பக்வெல்லா கூறுகையில்,
இலங்கை ஒன்றும் பிரிட்டனின் காலனி ஆதிக்க நாடு அல்ல என்பதை வாக்கெடுப்பு நடத்தியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இறையாண்மை கொண்ட நாடு இலங்கை. இங்கு மக்களின் விருப்பத்துக்கு ஏற்ற ஆட்சி நடைபெறுகிறது.
இது போன்ற வாக்கெடுப்பு குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. அதை நிராகரிக்கிறோம் என்றார்.
12 ராணுவ அதிகாரிகள் பணி நீக்கம்:
இந் நிலையில் மீண்டும் இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜபக்சே தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களான 12 ராணுவ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்து உத்தரவிட்டுள்ளார்.
அதில் 3 மேஜர் ஜெனரல்கள், 2 பேர் பிரிகேடியர்கள் அடங்குவர்.
தேர்தலின்போது இந்த 12 பேரும் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாகவும், ராஜபக்சேவுக்கு எதிராக அரசியல் சதி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் பொன்சேகாவுக்கு ஆதராவான மேலும் சில ராணுவ அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications