இந்தியக் கடற்படையில் இணையும் மிக் 29கே போர் விமானங்கள்

கோவாவில் வருகிற 19ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கியுள்ள அட்மிரல் கோர்ஷ்கோவ் விமானம் தாங்கி போர்க் கப்பலில் மிக்-29கே சேர்க்கப்படுகிறது.
ரஷ்யாவிடமிருந்து 16 மிக் -29 கே விமானங்களைப் பெறுகிறது இந்தியா. முதல் கட்டமாக கடந்த 2004ம் ஆண்டு நான்கு போர் விமானங்கள் பெறப்பட்டன. அத்துடன் கோர்ஷ்கோவும் வாங்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி கோவாவில் உள்ள ஐஎன்எஸ் ஹன்சா கடற்படைத் தளத்தில் இந்த விமானம் தாங்கிப் போர்க் கப்பல் சேர்க்கப்பட்டது.
தற்போது கோர்ஷ்கோவ் போர்க் கப்பலில், போர் விமானங்களை முறைப்படி சேர்க்கும் நிகழ்ச்சியே 19ம் தேதி நடைபெறுகிறது. இந்தப் புதிய படைப் பிரிவுக்கு பிளாக் பேந்தர் (கரும் சிறுத்தைகள்) என்று பெயரிடப்பட்டுள்ளதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக இந்த போர் விமானங்கள் உதிரி பாகங்களாக சரக்கு விமானத்தில் கோவா கொண்டு வரப்பட்டு இங்கு வைத்து அவை 'ரீ அசெம்பிள்' செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விமானங்களுக்கு 'விக்கிரமாதித்யா' என பெயர் சூட்டியுள்ளது கடற்படை.












Click it and Unblock the Notifications