உணவுப் பொருள் தயாரிப்புக்கு 30 பில்லியன்!- பெப்ஸி சிஇஓ இந்திரா நூயி
பெப்ஸிகோ நிறுவனம் உணவுப் பொருள் தயாரிப்புக்கென 30 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்யத் திட்டமிட்டிருப்பதாக அந்நிறுவனத்தின் சிஇஓ இந்திரா நூயி தெரிவித்துள்ளார்.
மக்களின் உடல் நலத்தைப் பேணும் உணவுப் பொருள்களான ஓட்ஸ், இயற்கை பழச்சாறு, மக்காச் சோள தயாரிப்புகளில் இந்த முதலீட்டை செய்யப் போவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திரா நூயி கூறுகையில், "எங்கள் நிறுவனத்துக்கு 43 பில்லியன் அளவு வருவாய் வருகிறது. இதில் 30 பில்லியன் அளவு மனதுக்கு மகிழ்ச்சி தரும் கூல்டிரிங்க், சிப்ஸ் ஐட்டங்களைத் தயாரிப்பதில் செலவிடுகிறோம்.
இந்தப் பொருள்கள் சுவையாக இருப்பது மட்டுமல்ல, ஹெல்தியாக இருப்பதும் முக்கியம் என்று உணர்ந்துள்ளோம். ஆரம்பத்தில் 10 பில்லியன் டாலரை ஹெல்தி உணவுகள் தயாரிக்கும் பிரிவுக்கென ஒதுக்க உள்ளோம். படிப்படியாக இதனை 30 பில்லியன் டாலராக உயர்த்துவோம். குழந்தைகள் நலனைக் காப்பதில் மிகவும் அக்கறை கொண்டுள்ளது பெப்சி. 10 வயதுக்கு மேற்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் பெப்சிதான் பாதுகாப்பான உணவு என்ற நிலை உருவாக வேண்டும் என்பதே என் ஆசை..." என்றார்.












Click it and Unblock the Notifications