பெட்ரோல் விலை ரூ. 5 உயர்கிறது-டீசல் லிட்டருக்கு ரூ.2

Subscribe to Oneindia Tamil

Petrol Pump
டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு தயாராகி விட்டதாக தெரிகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 2 ரூபாயும் உயரக் கூடும் எனத் தெரிகிறது.

இந்த வாரத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு குறித்த கிரித் பரேக் குழு தனது அறிக்கையை பெட்ரோலியத் துறையிடம் சமர்ப்பிக்குள்ளது. அதன் பிறகு விலை உயர்வு தெரிய வரும் என பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறியுள்ளார்.

மேலும், பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் சுதந்திரத்தை பெட்ரோலிய நிறுவனங்களிடமே ஒப்படைக்கும் முடிவுக்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பச்சைக் கொடி காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் முரளி தியோரா பேசுகையில், விலை உயராமல் பார்க்க முடிந்தவரை முயற்சி செய்து கொண்டுதான் உள்ளோம். ஆனால் பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணை ஆகியவற்றை குறைந்த விலையில் தொடர்ந்து விற்பதற்குத் தேவையான நிதி இருப்பு மத்திய அரசிடம் குறைவாகவே உள்ளதால், விலை உயர்வு தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது என்றார்.

தற்போதைய நிலையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 4.72ம், டீசல் விலை ரூ. 2.33ம் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+