எஸ்ஐ கொலை: 4 கைதிகள் வேறு சிறைக்கு மாற்றம்
நெல்லை: ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ கொலை வழக்கில் கைதாகி பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4 பேர் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.
ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ஆள்மாறாட்டத்தில் கடந்த 7ம் தேதி வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக கைதான கடையம் எஸ்.ஐ சிவசுப்பிரமணியனின் மனைவி சிவகாமி கொக்கிரகுளம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிவகாமியின் அண்ணன் கந்தசாமி, மாஜி எஸ்.ஐ சண்முகசுந்தரம், சுப்பிரமணி, கண்ணன், ஐயப்பன், கள்ளபிரான், சுரேஷ், முருகன், ராதாகிருஷ்ணன், முருகேசன், பாண்டி, முத்துராமலிங்கம் ஆகிய 12 பேர் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தென்மண்டல சிறைத்துறை பொறுப்பு டி.ஐ.ஜி கோவிந்தராஜ் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் பாளை சிறையில் இருந்து கள்ளபிரான், ஐயப்பன் ஆகியோர் நாகர்கோவில் சிறைக்கும், இன்ஜினியர் சுரேஷ், பாண்டி ஆகியோர் மதுரை மத்திய சிறைக்கும் மாற்றப்பட்டனர்.












Click it and Unblock the Notifications