ரூ.50 லட்சம் செக் மோசடி: ஒருவருக்கு சிறை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: 50 லட்ச ரூபாய் செக் மோசடி செய்தவருக்கு நான்காண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்தவர் முத்துக்கனி. இவர் நெல்லை சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், கண்ணன் மகன் கே.என்.பாலசுப்பிரமணியன், முத்தையா மகன் பார்வதிநாதன் ஆகியோரிடம் மொத்தம் ரூ. 54 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

வாங்கிய கடனுக்கு 4 பேருக்கும் காசோலை வழங்கியுள்ளார். குறிப்பிட்ட தேதியில் வங்கியில் காசோலையை வசூலுக்கு செலுத்தியபோது போதிய பணம் இல்லாமல் காசோலை திருப்பி அனுப்பப்பட்டன.

இதையடுத்து சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், கேஎன் பாலசுப்பிரமணியன், பார்வதிநாதன் ஆகியோர் தனித்தனியாக நெல்லை 4வது மாஜிஸ்திரட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை மாஜிஸ்திரேட் ஜெயவேல் விசாரித்து முத்துகனிக்கு ஒவ்வொரு வழக்கிற்கும் தனித்தனியாக ஓராண்டு சிறை தண்டனையும், தலா ரூ.2,500 வீதம் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீ்ர்ப்பு கூறினார்.

மேலும், கடனை திருப்பி செலுத்தவும் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+