இனி ரயில்களில் பாலியஸ்டர் படுக்கையில் தூங்கலாம்!

Subscribe to Oneindia Tamil

Train
சென்னை: முதல் வகுப்பு,​​ குளிர்வசதியுடன் தூங்கும் வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் பயணிகளுக்கு இனி பாலியஸ்டரால் ஆன படுக்கைகளை வழங்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

ரயில்களில் தற்போது பயன்படுத்தப்படும் பருத்தி இழை படுக்கைகள் சுகாதாரமற்றவையாக இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.​

இதனால் பாலியஸ்டரால் ஆன படுக்கைகளை வழங்க முடிவு செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.​

இத்தகைய படுக்கைகள் இரவு பயண ரயில்களில் முதல் வகுப்பு,​​ குளிர்வசதியுடன் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு வழங்கப்படும் என்று ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.​ ​

பாலியஸ்டரால் ஆன படுக்கைகளைப் பராமரிப்பது,​​ சுத்தம் செய்வது எளிது.​ மேலும் இது நீண்ட காலம் உழைக்கும் என்பதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.​

தற்போது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் படுக்கைகள் மாற்றப்படுகின்றன.​ அதற்குப் பதிலாக ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை படுக்கைகளை மாற்றுமாறும் அந்தந்த கோட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.​ ​

ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள படுக்கைகளுக்கு மாற்றாக புதிய பாலியஸ்டர் படுக்கைகளை படிப்படியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+