அப்படி கேட்கக் கூடாது.. இப்படி கேட்கனும்-நிருபர்களுக்கு பாடம் எடுத்த கருணாநிதி
சென்னை: எப்படி கேள்வி கேட்பது என்று நிருபர்களுக்கு பாடம் எடுத்தார் முதல்வர் கருணாநிதி.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை முதல்வர் சந்தித்தபோது ஒரு நிருபர், 'திரைப்படத் துறையினருக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறீர்கள். திரையரங்கில் டிக்கெட் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?' என்று கேட்டார்.
அவர் பக்கமாகத் திரும்பிய கருணாநிதி, 'இரண்டு கேள்விகளும் பொருந்தி வரவில்லையே?. அந்தக் கேள்வியை அப்படிக் கேட்கக் கூடாது. தனித்தனியே கேட்க வேண்டும். நான் ஒரு நிருபராக இருந்து இந்தக் கேள்வியைக் கேட்கிறேன் பாருங்கள்' என்றார்.
இதையடுத்து நிருபர்கள் அனைவரும் அவரிடம், 'நீங்களும் ஒரு பத்திரிகையாளர் தான். அந்த முறையில் அந்தக் கேள்வியை நீங்களே கேளுங்கள்' என்றனர் சிரித்தபடியே.
இதைத் தொடர்ந்து முதல்வர் கூறுகையில்,
'சினிமா கட்டணத்தை மாற்றி அமைப்பீர்களா? என்று ஒரு கேள்வி கேட்க வேண்டும். திரைப்படத் துறையினருக்கு பல சலுகைகளை அளித்து வருகிறீர்களே. அவர்கள் உங்களுக்கு நன்றி காட்டுகிறார்களா? என்று தனியாக கேட்க வேண்டும்' என்றார்.












Click it and Unblock the Notifications