ருசிகாவை திட்டமிட்டு நாசப்படுத்தினார் ரத்தோர்- கூடுதல் தண்டனை தேவை: சிபிஐ
சண்டிகர்: இளம் பெண் ருசிகாவை திட்டமிட்டே பாலியல் பலாத்காரம் செய்து, சாட்சிகளை மிரட்டி, சீரழித்தார் முன்னாள் டிஜிபி ரத்தோர். அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை போதாது. அதிகபட்ச தண்டனை தர வேண்டும் என்று சிபிஐ கோரியுள்ளது.
சண்டிகரைச் சேர்ந்த 14 வயது சிறுமி ருசிகாவை கடந்த 1990ம் ஆண்டு அப்போதைய காவல்துறை அதிகாரி ரத்தோர் பாலியல் பலாத்காரம் செய்து கற்பழித்தார். இதையடுத்து அடுத்த ஆண்டு ருசிகா தற்கொலை செய்து கொண்டார்.
நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கில் சமீபத்தில் சண்டிகர் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் ரத்தோருக்கு 6 மாத சிறைத் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. தற்போது டிஜிபி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் ரத்தோர்.
மிக மிக குறைந்தபட்ச தண்டனை அளிக்கப்பட்டது பெரும் புயலைக் கிளப்பியது. இதையடுத்து இந்த வழக்கில் சிபிஐ மேல் முறையீடு செய்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவில், ருசிகாவை சபலப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யவில்லை ரத்தோர். மாறாக, திட்டமிட்டு இதைச் செய்துள்ளார். மேலும், இந்த வழக்கு தொடர்பான சாட்சிகளை தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பல்வேறு அடக்குமுறைகளைப் பயன்படுத்தி மிரட்டி ஒடுக்கியுள்ளார்.
எனவே ரத்தோருக்குக் கொடுக்கப்பட்டுள்ள தண்டனை சற்றும் போதாது. மாறாக ஐபிசி 354வது பிரிவின் கீழ் அதிகபட்ச தண்டனையை (2 ஆண்டு கடுங்காவல் சிறை) அவருக்கு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது..
மேல் முறையீடு மீதான விசாரணை பிப்ரவரி 8ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், 68 வயதாகும் ரத்தோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி அத்ரி உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications