விலைவாசி உயர்வு- சோனியா தலைமையில் நடந்த காங். கூட்டத்தில் பவாருக்கு கண்டனம்
Subscribe to Oneindia Tamil

விலைவாசி உயர்வுப் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நேற்று சோனியா காந்தி தலைமையில் நடந்தது.
அப்போது விலைவாசி கடுமையாக உயர்ந்து வருவது குறித்து கவலை தெரிவித்த உறுப்பினர்கள், இதைத் தடுக்க அரசு போதிய அளவில் நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் விவசாய அமைச்சர் சரத் பவாரை கடுமையாக விமர்சித்தனர்.
விலைவாசி உயர்வைத் தடுக்க விவசாயத்துறை அமைச்சகம் போதிய அளவிலான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.
விலைவாசி உயர்வு தொடர்பாக மக்களுக்கு அதிருப்தி அளிக்கும் வகையிலான கருத்துக்களை அவர் அளிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டனர்.
மேலும் பவார் வசம் உள்ள நுகர்வோல் நலன் துறையை பிரித்து தனி அமைச்சகமாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications