மே மாதம் மதுரை ஏர்போர்ட் விரிவாக்கப் பணிகள் முடியும்
மதுரை: மதுரை விமானநிலைய புதிய டெர்மினல் கட்டுமானப் பணிகள் மே மாதத்தில் முடியும் என, விமான நிலைய ஆணைய தலைவர் வி.பி.அகர்வால் கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டுமானப் பணிகள் 130 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை பார்வையிட இந்திய விமான நிலைய ஆணைய தலைவர் வி.பி. அகர்வால் மதுரைக்கு வருகை தந்து ஆய்வு நடத்தினார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மதுரை விமானநிலையப் பணிகளில் இதுவரை 90 கோடி ரூபாய்க்கான பணிகள் முடிவடைந்துள்ளன. 40 சதவீதப் பணிகள் தான் பாக்கி உள்ளது. இந்த பணிகளும் மே மாதத்தில் முடிவடைந்து விடும்.
ரன்வே விரிவாக்கப் பணிக்காக விமானநிலையத்தின் இடதுபுறம் நில ஆர்ஜிதம் செய்து தருமாறு மாநில அரசிடம் கோரியுள்ளோம்.
மதுரையிலிருந்து வெளிநாடுகளுக்கான போக்குவரத்து குறித்து, வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தொடர்பு கொண்டு வருகின்றன. இது குறித்து, சுங்க இலாகாவிற்கு விமானநிலைய ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. விரைவில் விமான நிலை பணிகள் முடிவடையும் என நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications