புதுமனைப் புகுவிழாவில் மோதல்-சமாதானம் பேசிய பாதிரியாருக்கு அடி உதை

Subscribe to Oneindia Tamil

சுரண்டை: சுரண்டையில் புதுமனை புகுவிழாவிற்கு வந்த ஆலங்குளம் பாதிரியாரை அடித்து உதைத்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆலங்குளம் அண்ணா நகரை சேர்ந்தவர் ஜோசப். இவர் அங்குள்ள சிஎஸ்ஐ ஆலயத்தில் பாதிரியாராக உள்ளார். மேலும் அன்பு அறக்கட்டளை இல்லம் வைத்துள்ளார். இவரிடம் சுரண்டை அருகேயுள்ள இனாம்வெள்ளம்கால் பாஞ்சாலங்குறிச்சி நகரை சேர்ந்த மயில்ராகவன் டிரைவராக உள்ளார்.

மயில்ராகவன் அந்த பகுதியில் புதிய வீடு கட்டியுள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் குடியிருந்து வரும் மூக்கன் என்பவருக்கும், மயில்ராகவனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் மயில் ராகவன் புதிய வீட்டிற்கு கிரக பிரவேசம் நடத்த ஏற்பாடுகள் செய்து வந்தார். நிகழ்ச்சிக்கு பாதிரியார் ஜோசப் மற்றும் உறவினர்களை அழைத்திருந்தார்.

அழைத்தபடி பாதிரியார் ஜோசப் மாருதி காரில் மயில்வாகனன் வீட்டிற்கு வந்தார். அப்போது அங்கிருந்த மூக்கன், அவரது மனைவி வசந்தா, மகன்கள் வசந்தகுமார், குமார், சாமிநாதன் உள்பட 5 பேர் மயில்வாகனனிடம் தகராறு செய்தனர்.

உஙகள் வீட்டிற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் எங்கள் வீட்டின் அருகே நிறுத்துவதால் இடையூறு ஏற்படுகிறது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை பார்த்த பாதிரியார் ஏன் இப்படி நடந்து கொள்கிறேர்கள். பக்கத்து வீட்டுக்காரரா இருந்து கொண்டு இவ்வாறு சண்டையிடலாமா எனக் கேட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த மூக்கன், வசந்தா மற்றும் மகன்கள் நீங்கள் யார் எங்களைக் கேட்க என்று கூறி பாதிரியாரை கம்பால் தாக்கினர். மேலும் அவருடைய காரை அடித்து நொறுக்கினர். அவரது சட்டையையும் கிழித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த மோதலால் கிரக பிரவேசம் தள்ளி வைக்கப்பட்டது. இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+