ஷாருக் கான் நடித்த படத்தை புறக்கணிக்க வி.எச்.பி. அழைப்பு

Subscribe to Oneindia Tamil

Praveen Togadia
இந்தூர்: பாகிஸ்தான் வீரர்களை ஐபிஎல் போட்டிகளில் ஆட அனுமதிக்க வேண்டும் என்று கூறிய ஷாருக் கானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் நடித்துள்ள புதிய படத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் அழைப்பு விடுத்துள்ளது.

சிவசேனாவோடு தற்போத விஎச்பியும் ஷாருக் கானுக்கு எதிராக கிளம்பியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா இந்தூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் தனது தொடர்புகளை பாகிஸ்தானால் மறைக்க முடியாது.

அப்படிப்பட்ட நாட்டு அணி வீரர்களுக்கு ஷாருக் கான் ஆதரவாக பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. இந்தியாவுக்கு எதிராக உள்ள ஒரு நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு ஆதரவாக அவர் பேசி வருகிறார். எனவே வரவிருக்கிற ஷாருக் கானின் புதிய படத்தை மக்களே புறக்கணிக்க வேண்டும்.

இருப்பினும் புறக்கணிப்பு, போராட்டம் என எதுவாக இருந்தாலும் அதை அமைதி வழியில் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

திரையுலகினர், அரசியல்வாதிகளைப் போல அறிக்கைகள் விட ஆரம்பித்தால் பிறகு அதற்கான விளைவுகளையும் சந்திக்க அவர்கள் தயாராக இருந்துதான் ஆக வேண்டும்.

பாகிஸ்தானிலிருந்து தொடர்ந்து தீவிரவாதிகள் வந்தவண்ணம் உள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்களை நமது நாட்டில் ஆட அனுமதித்தால், அது தீவிரவாதிகளுககு ஊக்கம் அளிப்பது போலாகி விடும் என்றார் தொகாடியா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+