வெற்றிவேல் படுகொலை: இதுவரை 16 பேர் கைது - 4 பேர் தொடர்ந்து தலைமறைவு
ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கொலை வழக்கில் இதுவரை 16 பேர் பிடிபட்டுள்ளனர். இன்னும் 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த எஸ்ஐ வெற்றிவேல் ஆள்மாறாட்டம் காரணமாக கடந்த ஜனவரி 7ம் தேதி நடுரோட்டில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.
நாடு முழுவதும் பரபரப்பை உருவாக்கிய இச்சம்பவத்தில் தொடர்புடைய கடையம் எஸ்ஐ சிவசுப்பிரமணியனின் மனைவி சிவகாமி, முன்னாள எஸ்ஐ சண்முகசுந்தரம், சகோதரர்கள் கந்தசாமி, ஐயப்பன், கள்ளபிரான், அம்மமுத்து, ராதாகிருஷ்ணன், முருகேசன், முத்துகுமரன், சொர்ணபாண்டி, உள்ளிட்ட 10 பேரை தனிப்படையினர் கைது செய்தனர்.
கருத்தப்பாண்டி, முத்துராமலிங்கம், முருகன், கண்ணன், சுரேஷ், சுப்பிரமணியன் உள்ளிட்ட 6 பேர் பல்வேறு நீதிமன்றங்களில் சரண் அடைந்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய இன்னும் 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications