பவார்-ராவணன், மாயாவதி-சூர்ப்பனகை: வருண் மீண்டும் குசும்பு

உ.பி. மாநிலம் ஷிகார்பூர் பகுதியில் நடந்த கூட்டத்தில் வருண் பேசுகையில், இந்த நாட்டின் பண வீக்க உயர்வுக்கு ஒரு அண்ணன், தங்கைதான் காரணம். 'அண்ணன் ராவணன்' நாட்டின் விவசாய அமைச்சராக டெல்லியில் உட்கார்ந்திருக்கிறார். 'தங்கை சூர்ப்பனகை' உ.பியில் முதல்வராக இருக்கிறார்.
இவர்கள்தான் பண வீக்க உயர்வுக்குக் காரணம். ஆனால், இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி தாங்கள் தப்பித்துக் கொள்ள முயலுகிறார்கள்.
விலைவாசி உயர்வு ஒரு பிரச்சினைதான். ஆனால், அதை எதிர்த்து நாம் போராட வேண்டும். அதுதான் நமது கட்சியின் நோக்கம். எந்தக் காலகட்டத்திலும் நமது சுய மரியாதையை நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது.
நாம் நமது சுய மரியாதைக்காக போராடாமல் விட்டு விட்டால், கங்கை, கோமாதா (பசுக்கள்), கோவில்கள், நமது இளைஞர்கள் எல்லோரும் நம்மை விட்டுப் போய் விடுவார்கள் என்றார் வருண்.
பவாரை ராவணனாகவும், மாயாவதியை சூர்ப்பனகை என்றும் வருண் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது முஸ்லீம்களுக்கு எதிராக அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications