துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி சிங் சென்னையில் கைது

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் உள்பட சென்னையிலும் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சிங் துப்பாக்கி முனையில் சென்னையில் பிடிபட்டார். இவரிடம் விசாரணை நடத்துவதற்காக டிஐஜி கண்ணப்பன் உத்தரவின் பேரில் நெல்லை தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

பாளையங்கோட்டை பெருமாள்புரம் துரைபாண்டியன் மகன் சாம்சுந்தர்சிங். பிரபல ரவுடியான இவரது சொந்த ஊர் காளக்காடு அருகே உள்ள இடையன்குளம்.

இவர் காமராஜர் ஆதித்தானர் கழக தலைவர் மறைநத காரத்தே செல்வின் மற்றும் ராக்கெட் ராஜா, கோழி அருள் போன்றோர்களின் உறவினர் ஆவார். 6க்கும் மேற்பட்ட கொலை வழக்கில் கைதான இவர் சில வழக்குகளில் விடுவிக்கப்பட்டார்.

இது தவிர இவர் மீது வழிப்பறி, ஆள்கடத்தல் உள்பட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 2007ம் ஆண்டு ராதாபுரம் போலீஸ் நிலையம் அருகே காரில் வந்து கொண்டிருந்த வடக்கன்குளம் தொழிலதிபர் எஸ்ஏ ராஜாவை சிங் உள்பட 6 பேர் கொண்ட கும்பல் வெடிகுண்டு வீசி கொல்ல முயன்றது. இவ்வழக்கில் ஜாமீனில் வந்த சிங் தலைமறைவானார்.

இது தவிர காரத்தே செல்வின் கொலைக்கு பழிக்கு பழியாக கட்டத்துரையை சென்னையில் வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கிலும் இவர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் கைதான இவர் ஜாமீனில் வெளிவந்தார்.

பல வழக்குகளில் தூத்துக்குடி, நெல்லை போலீசார் தேடி வரும்போது எல்லாம் இவர் ஆந்திரா, ஓரிசா, மகாராஷ்டிரா கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு தப்பி சென்று தலைமறைவாகி விடுவார். மேலும் ஆந்திராவில் உள்ள ரவுடிகளிடம் இருந்து துப்பாக்கிளை வாங்கி வந்து தனது சாக்க்கள், மற்றும் தாதாக்களுக்கு வினியோகிப்பது உண்டு.

சிங் கைதான சம்பவம் சென்னை மட்டுமல்லாது, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாம்சுந்தர் சிங் மீது நெல்லை, தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளதால் டிஐஜி கண்ணப்பன உத்தரவின்பேரில் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக நெல்லையில இருந்து தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+