வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது அக்னி-3 ஏவுகணை!

ஒரிசா மாநிலத்தில் உள்ள பாலாசூர் அருகே வீலர் தீவில் உள்ள சோதனைத் தளத்தில் இன்று காலை 10.46 மணிக்கு இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக ராணுவத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அணுஆயுதத்தை தாங்கியபடி, தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை சென்று தாக்கும் இந்த இந்த ஏவுகணை முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரிசா கடற்கரைக்கு அப்பால் வீலர் தீவில் அமைக்கப்பட்டுள்ள எவுதளத்தில் இருந்து இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது.
தாக்கப்பட்ட இலக்கில் ஏவுகணையின் தாக்கம் மற்றும் அதன் செயல்பாடு முழுவதும் துல்லியமாக கண்காணிக்கப்பட்டது. இதையடுத்து, சோதனை முழு திருப்தி அளிப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
அக்னி-3 ஏவுகணை ஏற்கனவே மூன்று முறை சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, தற்போது நான்காவது முறையாக சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications