ஃபொன்சேகாவை ராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு?
கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சேவை கொல்ல முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் ராணுவ தளபதி சரத் ஃபொன்சேகா ராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
இலங்கை அதிபர் தேர்தலின் போது தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராஜபக்சேவை கொலை செய்ய திட்டமிட்டதாக, முன்னாள் ராணுவ தளபதி சரத் ஃபொன்சேகா மீது புகார் கூறப்பட்டது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனது ஆதரவாளர்களுடன் ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாகவும், அதிபர் ராஜபக்சேசவை சுட்டுக்கொல்ல திட்டமிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதொடர்பாக இலங்கை அரசு வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகிறது. இதல் ஃபொன்சேகா மீது குற்றப்புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆனால், ஃபொன்சேகா ராணுவ தளபதி பதிவியை வகித்த காரத்தால், அவர் மீதான விசாரணையை ராணுவ நீதிமன்றத்தில் நடத்தலாமா என்பது குறித்து இலங்கை அரசு பரிசீலித்து வருகிறது.
இதற்கிடையே, சதி திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் நேரத்தில் கொழும்பு ஓட்டலில் ஃபொன்சேகாவுடன் தங்கியிருந்த பத்திரிகையாளர்களிடமும் விசாரணை நடத்த இலங்கை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அத்துடன், முந்தைய ஆட்சிக்காலத்தில் ராணுவ தடவாளங்கள் கொள்முதலில் நடந்த முறைகேட்டில் பொன்சேகாவின் மருமகனுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுகுறித்தும் ராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தும் எனத் தெரிகிறது.
பொன்சேகா மீதான புகார் தொடர்பான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று இலங்கையில் தகவல்கள் பரவுகின்றன.
எதிர்க்கட்சிகள் கண்டனம்
பொன்சேகாவின் ஆதரவாளர்கள் மீது இலங்கை அரசு திட்டமிட்டு பழிகளை சுமத்துவதாக ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்களை இலங்கை அரசு தேடிப்பிடித்து பழிவாங்குவது கண்டிக்கத்தக்கது என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications