ராகுலை மீண்டும் சீண்டுகிறார் தாக்கரே
மும்பை: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியை சிவசேனா தலைவர் பால்தாக்கரே மீண்டும் விமர்சித்துள்ளார்.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவில் ராகுல்காந்தியின் சமீபத்திய மும்பை பயணம் குறித்து குறிப்பிடுகையில்,
'அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி மும்பைக்கு வந்த போது அவர் பேச்சில், மும்பையை பலமுறை தொடர்ந்து பம்பாய் என்றே குறிப்பிட்டார்.
மும்பையை மகாராஷ்டிராவில் இருந்து பிரிக்க நினைப்பவர்கள் தான் மும்பை எனக் கூறாமல், பாம்பே எனக் கூறுவது வழக்கம்.
ராகுல்காந்தியின் மும்பை பயணம், இங்கு காங்கிரஸ் கட்சிக்கு, மராத்திய மக்கள் நடத்திய இறுதி சடங்காகவே தெரிகிறது.
ராகுல்காந்தி வந்தபோது அவரின் ஷூக்களை சுமந்தபடி திரிந்த மாநில உள்துறை அமைச்சர் ரமேள் பாக்வேயின் செயல் மராத்தியர்களுக்கே வெட்கக்கேடானது.
ராகுல்காந்தி ஒன்றும் மகாத்மா கிடையாது. அவரின் ஷூக்களை மார்புக்கு நேராக பிடித்து நின்றுகொண்டிருந்த அமைச்சர் தன்னைத் தானே தரம் தாழ்த்திக்கொண்டார்' எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications