பெண் பார்க்க போன இடத்தில் திருடிய மாப்பிள்ளை!
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற வீ்ட்டில் நகைகளை திருடிய மாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள அத்திப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது தங்கை மாரியம்மாளுக்கு திருமணம் செய்வதற்காக கோவில்பட்டியை சேர்ந்த தரகர் சமுத்திரக்கனி மூலம் மாப்பிள்ளை பார்க்கும்மாறு கூறியிருந்தார்.
சமுத்திரக்கனி ஏற்பாட்டி்ன் பேரில் சங்கரன்கோவில் அருகேயுள்ள கரிவலம்வந்த நல்லூர் பழைய தெப்பகுளத் தெருவை சேர்ந்த கருத்தபாண்டி என்ற விஜயகுமார் நேற்று முன்தினம் கணேசன் வீட்டிற்கு பெண் பார்க்க சென்றார். ஆனால் மாப்பிள்ளையை தனக்கு பிடிக்கவி்ல்லை என்று மாரியம்மாள் தெரிவித்து விட்டார்.
இந்த நிலையில், வீட்டில் உள்ளவர்கள் சமையல் அறைக்கு சென்றதை பயன்படுத்தி கணேசன் மனைவி மாரீஸ்வரி அறையில் வைத்திருந்த 22 கிராம் தங்க சங்கிலி, கம்மல் ஆகியவற்றை கருத்தப்பாண்டி நைசாக திருடிக்கொண்டு வெளியேறினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் குருவிகுளம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று கரிவலம்வந்தநல்லூர் மணிக்கூண்டு பஸ் நிறுத்ததில் நின்று கொண்டிருந்த கருத்தபாண்டியை இன்ஸ்பெக்டர் கிறிஸ்டின் ஜெயசில், எஸ்ஐ சீனியம்மாள் மற்றும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 22 கிராம் நகையை கைப்பற்றினர்.












Click it and Unblock the Notifications