கடவுள் பக்தி வேண்டும்: எஸ்வி சேகர் அறிவுரை
கரூர்: கரூர் அருகே உள்ள அரவக்குறிச்சியில் தமிழ் மாநில மத நல்லிணக்க பேரவை சார்பில் மத நல்லிணக்கம் மற்றும் மனித நேய மாநாடு நடைபெற்றது.
பேரவையின் நிறுவன தலைவர் காஜா செரீப் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் நடிகரும் எம்எல்ஏவுமான எஸ்விசேகர் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், 'இங்கு நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதை நான் பெருமையாக கருதுகிறேன். காரணம் இந்த மேடையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என சமமாக உட்கார்ந்துள்ளோம்.
நான் வாழ் நாளில் சுமார் 5000 நாடக மேடைகளில் நடித்துள்ளேன். பல அரசியல் மேடைகளில் கலந்து கொண்டு பேசியுள்ளேன்.
ஆனால் அதில் எல்லாம் கிடைக்காத மன நிறைவு இந்த மேடையில் கிடைத்துள்ளது.
கடவுள் பக்தி இருந்தால் தான் ஒரு மனிதனால் வெற்றி பெற முடியும். எல்லா மதங்களும் நல்லவைகளைத் தான் போதிக்கின்றன.
ஒவ்வொரு மத்திற்கும் ஒரு கடவுள் உண்டு. ஆனால் கடவுள் என்பவர் ஒருவரே. எப்படி என்றால் இங்கிருந்து கோவை செல்ல பல வழிகள் உண்டு. ஆனால் கடைசியாக சென்றடையும் இடம் கோவை.
அது போல நாம் எந்த வழியில் வந்தாலும் கடைசியில் சென்றடையும் இடம் கடவுளிடம் தான். கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியோடு விளையாடும் போது நாம் இந்தியன் என்று பார்க்கிறார்களோ தவிர நான் முஸ்லீம் என்று பார்ப்பதில்லை. நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்றார்.












Click it and Unblock the Notifications