சென்னை கல்லூரியில் பாம்பு புகுந்தது- மாணவிகள், ஆசிரியைகள் ஓட்டம்!
Subscribe to Oneindia Tamil

சென்னை அண்ணா சாலையில் உள்ளது காயிதே மில்லத் கல்லூரி. இங்கு கலை- அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிக்கும்போதே தொழிற்கல்வி படிக்கும் புதிய திட்ட தொடக்க விழா நடந்தது.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொனமுடி கலந்து கொண்டார்.
முன்னதாக அவர் வருகைக்காக மாணவிகள், பேராசிரியைகள் காத்திருந்தனர். அப்போது அங்கு ஒரு சிறிய பாம்பு வந்தது. பாம்பபைப் பார்த்த மாணவிகள் அலறியடித்தபடி ஓடினர். பேராசிரியைகளும் பாதுகாப்பான இடம் தேடி ஓடினர்.
மாணவிகள், ஆசிரியைகளின் பரபரப்பு அலறால் பாம்பும் பீதியடைந்ததோ என்னவோ யார் மீ்தும் பாயாமல் வேகமாக அங்குமிங்குமாக ஓடி மறைந்து விட்டது.
இந்தப் பாம்பால் கி்ட்டத்தட்ட அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications