பொன்சேகா விவகாரத்தில் சட்டப்படி நடக்க வேண்டும் - இந்தியா
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பொன்சேகா விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நம்புவதாக இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.
பொன்சேகா கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கருத்து தெரிவித்த போதிலும், இந்தியா பதிலேதும் பேசாமல் அமைதியாக இருந்து வந்தது.
நேற்று தனது மெளனத்தைக் கலைத்தது இந்தியா. மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,
ஓய்வுபெற்ற ஜெனரல் சரத் பொன்சேகா கைது பற்றி இலங்கை அரசுடன் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். இப்பிரச்சினையில், ஜனநாயக இலங்கையில், உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று நட்பு நாடு என்ற முறையிலும், அண்டை நாடு என்ற முறையிலும் நாங்கள் நம்புகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications