திருச்சி: பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்துக்காக பாரதிதாசன் பல்கலைக்கழக நிலத்தை கையகப்படுத்தக் கூடாது எனக் கூறி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சியில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்துக்காக புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 150 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் அசோக்தாகூர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் அப்பகுதியை பார்வையிட்டனர்.

இந்த நடவடிக்கைக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இன்று காலை பல்கலைக்கழக ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு தலைவர் பேராசியர் குணாலன் தலைமையில், 150 ஏக்கர் இடத்தை அரசு எடுக்கக் கூடாது என்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஏற்கனவே பல்கலைக் கழகத்துக்கு தேவையான ஆய்வுக்கூடம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் இடப்பற்றாக்குறையால் நிலுவையில் உள்ள நிலையில் இந்த இடத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் எனக்கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+