திருச்சி விமானம் மீது பறவை மோதியது: 130 பயணிகள் தப்பினர்
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் விமான என்ஜினில் பறவை மோதியது.
சென்னையிலிருந்து திருச்சி வழியாக துபாய் செல்லும் ஏர்-இந்தியா விமானம் நேற்று பகல் 1.35 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கி, பயணிகள் 130 பேரை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.
அப்போது, விமான நிலைய ஓடுபாதையில் விமானம் ஓட ஆரம்பித்த நிலையில் திடீரென பறவை ஒன்று விமானத்தின் இன்ஜினில் மோதி சிக்கிக் கொண்டது.
இதனால் விமானத்தை இயக்க முடியாத சூழ்நிலைக்கு ஏற்பட்டது. எனவே, இந்த விமானத்தை ஓடுபாதையிலேயே இறக்கி நிறுத்தினார் விமானி.
இதையடுத்து பறவை அப்புறப்படுத்தப்பட்டு விமானம் தாமதமாகக் கிளம்பிச் சென்றது.
திருச்சி விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள மாமிசக் கழிவுகள் அதிகம் இருப்பதால் தான் இது போன்ற பறவைகள் அடிக்கடி சுற்றித் திருவதாகவும், அதனால் விபத்து ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications