17ம் தேதிக்குப் பிறகு பென்னாகரம் தேர்தல் தேதியை அறிவிப்போம் - தேர்தல் ஆணையம்

பென்னாகரம் தொகுதிக்கான இடைத் தேர்தலை மார்ச்சுக்குள் நடத்த வேண்டும் என்று கோரி தி்முக கூட்டணி எம்.பிக்கள் நேற்று நவீன் சாவ்லாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
அதற்கு சாவ்லா பதிலளிக்கையில், வருகிற 17ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அதற்குப் பின்னர் தேர்தல் தேதி குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று டெல்லிக்கு விரைந்து சென்ற தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, நவீன் சாவ்லாவுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என திமுக கூட்டணியினர் வலியுறுத்தியிருந்தாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே மார்ச் மாதத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.
ஆனால் அப்போது தமிழகம் முழுவதும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்பதால் அப்போது நடத்துவதிலும் சிக்கல் நிலவுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை முடிவு செய்யும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications