மதுரை காந்தி மியூசியத்தில் ஊழியர் தற்கொலை
மதுரை: மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில், நேற்று பணிக்கு வந்த ஊழியர் வேணுகோபால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை செல்லூரைச் சேர்ந்தவர் வேணுபோபால்(48). இவர், 30 ஆண்டுகளாக காந்தி மியூசியத்தில் பணியாற்றி வந்தார்.. இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
காலை பணிக்கு வந்த வேணுகோபால், குடோன் அறையில், கயிற்றால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது, அறையை சுத்தம் செய்ய ஊழியர் லட்சுமி, சக ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வேணுகோபாலின் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காந்தி மியூசியம் ஊழியர்களுக்கு பல வருடங்களாக மிக குறைந்த சம்பளம் தருவதால் நாங்கள் அணைவரும் வறுமையில் உள்ளோம். இதன் காரணமாக வேணுகோபால் மன உளச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டு இருக்காலம் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications