குற்றாலத்தில் எலும்பு முறிவு சிகிச்சை மாநாடு தொடக்கம்
தென்காசி: குற்றாலத்தில் தமிழ்நாடு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாடு இன்று தொடங்கியது. இது மூன்று நாட்கள் நடக்கிறது.
தமிழ்நாடு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க 43வது ஆண்டு மாநாடு குற்றாலம் கேரளா அரண்மனை வாளகத்தில் இன்று தொடங்கியது.
மாநாட்டில் கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, மாநிலங்களை சேர்ந்த 50 நிபுணர்கள், 650 மருத்துவர்கள் உள்பட மொத்தம் ஆயிரத்து 200க்கு மேல் கலந்து கொள்கின்றனர்.
மாநாட்டின் நாளைய நிகழ்ச்சிகளுக்கு சங்க தலைவர் நடேசன் தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை கழக துணை வேந்தர் மயில்வாகனண் நடராஜன் மாநாட்டை துவக்கி வைக்கிறார்.
மாநாட்டில் மூட்டு அறுவை சிகிக்சையில் நவீன கண்டுபிடிப்புகள், குழந்தை எலும்பு பிரச்சனை உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்படுகின்றன. இவை குறித்து விவாதம் நடத்தப்படுகிறது.
இரத்த வங்கிகள் செயல்படுவது போல எலும்பு வங்கிகள் அமைப்பது குறித்து கலந்துரையாடல் நடத்தப்படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் நவீன முறையில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை பற்றி விளக்குகின்றனர்.












Click it and Unblock the Notifications