பொன்சேகாவை விடுவிக்க ராஜபக்சேவை நேரில் சந்தித்து ரணில் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: கைது செய்யப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என்று ராஜபக்சேவை நேரில் சந்தித்து இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே கோரிக்கை விடுத்தார்.

இன்று காலை ராஜபக்சேவை ரணில் சந்தித்துப் பேசினார். அப்போது பொன்சேகாவை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திச அத்தநாயகே கூறினார்.

இதுகுறித்து அத்தநாயகே கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே அதிபரை சந்தித்து பொன்சேகா விடுதலை குறித்துப் பேசினார். மேலும், தான் பொன்சேகாவை சந்தித்துப் பேச அனுமதிக்குமாறும் கோரினார்.

பொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது என்பதையும் ராஜபக்சேவுக்கு ரணில் எடுத்துரைத்தார். மேலும், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக பொன்சேகாவை விடுவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார் என்றார் அத்தநாயகே.

பொன்சேகாவை தற்போது அவரது மனைவியைத் தவிர வேறு யாரும் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+