சுயநலத்துக்காகவே மோதுகிறார்கள் ஷாருக்கும், சிவசேனாவும்: யோகி ராம்தேவ் கருத்து
ராய்ப்பூர்: ஷாருக்கானுக்கு தொழில் பிரச்னை, சிவசேனாவுக்கு அரசியல் பிரச்னை. இருவரும் தங்கள் சொந்த பிரச்னைகளுக்காக அடித்துக் கொள்கிறார்கள் என்று யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார்.
சட்டீஸ்கருக்கு வந்த யோகி ராம்தேவ் ராய்ப்பூரில் நிருபர்களிடம் பேசுகையில்,
'பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினரை ஐபிஎல் போட்டிகளில் சேர்க்காமல் விட்டதற்கு ஷாருக்கான் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதற்கு கண்டனம் தெரிவிக்க அவரின் படத்தை வெளி வராமல் சிவசேனாவினர் தடுப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
ஷாருக்கான் தொழில் மற்றும் பொருளாதார அம்சங்களை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
சிவசேனா அமைப்பினரோ தங்களின் அரசியல் ஆதாயங்களுக்காக இப்படிப்பட்ட பிரச்னைகளை எழுப்பி வருகின்றனர். இவர்கள் இருவரும் தங்களின் சொந்த விவகாரங்களுக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் மக்கள் மாவோயிஸ்டுகளின் தாக்குதல், உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் பல்வேறு பிரச்னைகளுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள். மக்களின் உண்மையான பிரச்னைகள் குறித்து இங்கு யாரும் பேசுவதில்லை என்றார்.












Click it and Unblock the Notifications