அனுமதியின்றி பிரதமர் புகைப்படத்தை பயன்படுத்த பிரதமர் அலுவலகம் தடை

Subscribe to Oneindia Tamil

Manmohan Singh
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கின் புகைப்படத்தை முன் அனுமதி பெற்ற பின்னரே பயன்படுத்த வேண்டும் என்று அனைத்து அமைச்சகங்களுக்கும் பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25வது கி.மீ தொலைவிலும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் படங்களை பிரமாண்டமான 'கட்அவுட்'களாக அமைக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின.

இதுபோல சுமார் ஆயிரத்து 500 போர்டுகள் அமைக்க இருப்பதாக வெளியான தகவல் மீடியாக்களில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்நிலையில் நெடுஞ்சாலைத் துறை அமைக்கும் இந்த கட்அவுட்களுக்கான புகைப்படத்தை பயன்படுத்த பிரதமர் அனுமதி வழங்கினாரா என தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் வகையில், விளம்பரங்கள் மற்றும் இதர தேவைகளுக்காக பிரதமரின் படத்தை பயன்படுத்த வேண்டுமானால் முறைப்படி ஒப்பதல் பெற்றாக வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனைத்து அமைச்சகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+