ஆந்திராவில் இருந்து பாக்கெட் சாராயம் கடத்தல்: 2 பெண்கள் கைது
Subscribe to Oneindia Tamil
திருவள்ளுர்: ஆந்திராவில் இருந்து பஸ்சில் சாராயம் கடத்திய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திரா சத்திரவாடா கிராமத்திலிருந்து பஸ்சில் சாராயம் கடத்தி வருவதாக திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
பாண்டூர் அருகே ஆந்திராவிலிருந்து வந்த பஸ்சை மறித்து போலீசார் சோதனை செய்தனர். இரண்டு பெண்கள் போலீசாரை பார்த்ததும் பஸ்சில் இருந்து இறங்க முயன்றனர்.
போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் சாக்கு பையில் மறைத்து வைத்து சாராய பாக்கெட்டுகளை ஆந்திராவிலிருந்து கடத்தி திருவள்ளுர் புறநகர் பகுதியில் விற்பனை செய்ய எடுத்துவந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கடத்தில் ஈடுபட்ட திருத்தணியை அடுத்த சோக்கானுரை சேர்ந்த விஜயா (45) குட்டியம்மாள் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications