குஜராத்தில் வெடிபொருள் குவியல் பறிமுதல் - 4 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: குஜராத் மாநிலம் வாபி என்ற இடத்தில் பெருமளவிலான அம்மோனியம் நைட்ரேட் மற்றும் டெட்டனேட்டர் வெடிபொருட்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
புனேவில் குண்டுவெடிப்பு நடந்த அடுத்த நாள் இவை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மொத்தம் 200 கிலோ அம்மோனியம் நைட்ரேட், 600 டெட்டனேட்டர்கள் சிக்கியுள்ளன.
மொத்தம் நான்கு பைகளில், பைக்கு தலா 50 கிலோ என்ற அளவில் இந்த வெடிபொருட்களை வைத்துக் கொண்டு நான்கு பேர் ஒரு காரில் வாபி - சில்வாசா சாலையில் சென்று கொண்டிருந்தபோது போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்து அவர்களைக் கைது செய்து இவற்றைப் பறிமுதல் செய்தனர்.
நான்கு பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications