பட்ஜெட் - பிரணாப் முகர்ஜியை சந்தித்து ராகுல் கொடுத்த 'லிஸ்ட்'

Subscribe to Oneindia Tamil

Rahul Gandhi
டெல்லி: பொது பட்ஜெட்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கக் கோரி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் யோசனை தெரிவித்துள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி.

மத்திய பொது பட்ஜெட் வருகிற 26ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதுதொடர்பான பணிகளில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தீவிரமாக உள்ளார்.

இந்த நிலையில் பிப்ரவரி 11ம் தேதி பிரணாப் முகர்ஜியை ராகுல் காந்தி சந்தித்துள்ளார். அப்போது சில திட்டங்களை அவர் யோசனையாக பிரணாப்பிடம் கொடுத்துள்ளார்.

அதில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதும் ஒரு கோரிக்கையாகும் என்று தெரிகிறது.

மேலும் உணவு பாதுகாப்பு சட்ட மசோதா, சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் தனது கருத்துக்களை நிதியமைச்சருடன் ராகுல் பகிர்ந்து கொண்டாராம்.

கடந்த வாரம்தான் காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் பட்ஜெட் குறித்த தங்களது யோசனைகளைத் தெரிவிக்குமாறு பிரணாப் முகர்ஜி கேட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+