மருத்துவமனையில் வயலார் ரவி- நலம் விசாரித்தார் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: லைபீரியாவில் விபத்தில் காயமடைந்து தற்போது சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவியை முதல்வர் கருணாநிதி சந்தித்து நலம் விசாரித்தார்.
லைபீரியா சென்றிருந்த வயலார் ரவி, பிப்ரவரி 4ம் தேதி மான்ரோவியா என்ற இடத்தில் சிக்கி காயமடைந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரவி மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். கடந்த வியாழக்கிழமை அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை இன்று முதல்வர் கருணாநிதி நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். அவருடன் மத்திய அமைச்சர்கள் ராசா, காந்திசெல்வன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
முன்னதாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் ரவியை சந்தித்து நலம் விசாரித்தார்.












Click it and Unblock the Notifications