தேனி வைகை அணை அருகே பயங்கர விபத்து - 9 பெண்கள் பலி
ஆண்டிப்பட்டி: தேனி மாவட்டம் வைகை அணை அருகே வேன் மீ்து டிப்பர் லாரி பயங்கரமாக மோதியதில் 9 பெண்கள் சம்பவ இடத்திலேயே கோரமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த 9 பேரும் வேனில் பயணம் செய்தவர்கள். இந்த கோர விபத்தில் 17 பேர் காயமடைந்தனர். உயிரிழந்த பெண்கள் தேனி மாவட்டம் தேவதானப்பட்டியைச் சேர்ந்தர்கள் என்று தெரிய வந்துள்ளது.
தேவதானப்பட்டியைச் சேர்ந்த பிரபு என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்து பிரேதப் பரிசோதனை நடத்தினர்.
பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரபுவின் உடலுடன் ஒரு வேனில் உறவினர்கள் 25 பேர் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது வேகமாக வந்த டிப்பர் லாரி, வேனுடன் மோதி விட்டது. இதில்தான் இந்த விபத்து ஏற்பட்டு 8 பெண்கள் உயிரிழந்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமுதவள்ளி என்ற பெண் பின்னர் இறந்ததால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.












Click it and Unblock the Notifications