அமெரிக்க சர்ச்சில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச் சூடு: 2 சிறுவர்கள் காயம்q

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ பே சர்ச்சில் நேற்று ஞாயிற்றுக் கிழமை பிரார்த்தனை கூட்டத்துக்காக ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர்.
அப்போது உள்ளூர் நேரப்படி பகல் 12.30 மணிக்கு மர்ம நபர் ஒருவர் சர்ச்சுக்குள் புகுந்தார். அப்போது திடீரென துப்பாக்கியை எடுத்து கூட்டத்தினரை நோக்கி கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார்.
இதில் கூட்டத்தில் இருந்த 14 வயது மற்றும் 19 வயது சிறுவர்கள் மீது குண்டடி பட்டது. உடனடியாக அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை பிடித்தனர்.
அவருடன் வந்திருந்த மேலும் இருவரையும் பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிவளைத்து பிடித்தனர். குண்டடிபட்ட சிறுவர்கள் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
பிடிபட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சர்ச்சில் வேறு யாரையோ துப்பாக்கியால் சுட திட்டமிட்டு வந்தவர்கள் கூட்டத்தை நோக்கி சுட்டதில் குறி தவறி சிறுவர்கள் மீது குண்டு பாய்ந்திருக்கக்கூடும் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications