ரஜினி மன்ற தலைவருக்கு அடி உதை - போலீஸ் மீது கல் வீசி கும்பல் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் ரஜினி மன்ற தலைவருக்கு அடி உதை விழுந்தது. தடுக்க வந்த போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

வேலூர் மாவட்ட ரஜினி மன்ற தலைவராக நசிருதீன் என்பவர் உள்ளார். இவர் அங்குள்ள அரிசி கடை ஒன்றில் உட்கார்ந்து இருந்தபோது, வேலூர் ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்த பாக்யராஜ், சாரதி ஆகிய இருவர் அந்த வழியாக சென்றுள்ளனர். அப்போது, அவர்களை நசிருதீன் அழைத்து கிண்டலடித்ததாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த பாக்யராஜூம், சாரதியும் நசிருதீனை அடித்து உதைத்தனர். இதில் பாக்யராஜ், சாரதி, நசிருதீன் ஆகிய மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, ரஜினி மன்ற தலைவர் நசிரூதீன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பாக்யராஜ், சாரதி ஆகியோரை கைது செய்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது

இதைத் தொடர்ந்து வேலூர் சார்பனாமேட்டில் டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தலைமையில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஒரு தரப்பை சேர்ந்த 100 -க்கும் மேற்பட்டவர்கள் போலீசார் மீது திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 2 போலீஸ் ஜீப்களின் கண்ணாடி உடைந்தது.

மேலும் பாகாயம் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, ஜீப் டிரைவர் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, போலீசார் வீடு, வீடாக சென்று 25 -க்கும் அதிகமானவர்களை அதிரடியாக பிடித்து போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+