தேமுதிகவுக்கும் பரவிய அதிமுக 'நோய்'!

வழக்கமாக அதிமுகவில் தான் உட்கட்சிப் பூசலை வைத்து போயஸ் கார்டனில் உள்ள அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீ்டடை அக் கட்சியினர் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவது வழக்கமாக உள்ளது.
இப்போது தேமுதிகவுக்கும் 'இந்த நோய்' பரவியுள்ளது.
நாகை மாவட்ட தேமுதிக செயலாளராக பாலா அருட்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாஜகவில் இருந்து சமீபத்தில் தேமுதிகவுக்கு வந்தவர்.
இவர், கட்சிக்கு வந்த பின் ஆரம்ப காலத்தில் இருந்தே தேமுதிகவில் இருப்பவர்களை வெளியேற்ற ஆரம்பித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இந் நிலையில் நாகை மாவட்ட நிர்வாகிகள் சிலரை கட்சித் தலைமை மாற்றம் செய்தது. இதில் அருட்செல்வத்தின் ஆட்களே அதிக லாபம் அடைந்தனர்.
இதனால் ஏற்கனவே அதிருப்தியில் இருந்த தேமுதிகவினர் கட்சியி் தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து முறையிட நாகை மாவட்ட அவைத் தலைவர் வைத்தியநாதன் தலைமையில் இன்று காலை 8.30 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு கூட்டமாக வந்தனர்.
ஆனால், அலுவலகம் பூட்டிக் கிடந்தது. இதையடுதது விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்றனர். அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
விஜயகாந்தின் உதவியாளர் அவர்களிடம், அலுவலகத்துக்கு செல்லுமாறும், அங்கு வந்து விஜயகாந்த் உங்களது குறைகளை கேட்பார் என்றும் கூறி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
இதையடுத்து காலை 10.30 மணியளவில் அவர்கள் மீண்டும் கட்சியின் தலைமை அலுவலகத் துக்கு வந்தனர். அவர்களுடன் தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி, துணைச் செயலாளர் இளங்கோவன் ஆகியோர் சமாதானப் பேச்சு நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications