சென்னை: கல்லூரி மாடியில் இருந்து குதித்து பேராசிரியை தற்கொலை
சென்னை: சென்னை கல்லூரியில் பேராசிரியை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சண்முகவர்த்தினி மீனாட்சி கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார்.
இவர் இன்று வழக்கம் போல கல்லூரிக்கு வந்தார். கல்லூரியிலும் வகுப்புகள் வழக்கம் போல துவங்கின. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென கல்லூரி கட்டிடத்தின் மாடியில் இருந்து சண்முகவர்த்தினி கீழே குதித்தார்.
இதில் மண்டை உடைந்து அவர் அந்த இடத்திலேயே பலியானார். இதனால் கல்லூரியில் இருந்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சடலத்தை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேராசிரியை மாடிக்கு செல்வதற்கு முன்னதாக செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. எனினும் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரிக்குள்ளேயே போராசிரியை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications