சிபிஐ விசாரணை: மாநில அரசின் அனுமதியின்றி நீதிமன்றங்களே உத்தரவிடலாம்
டெல்லி: முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட உயர்நீதிமன்றங்கள் மாநில அரசின் ஆலோசனையை பெற வேண்டியதில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விதிவிலக்கான சந்தர்ப்பங்களிலும், அதிமுக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் மட்டுமே இந்த அதிகாரத்தை உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் பயன்படுத்தலாம் என்றும், இதுபோன்ற உத்தரவுகளை எச்சரிக்கையுடனும், கூடுதல் கவனத்துடனும் கையாள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், டி.கே.ஜெயின், பி.சதாசிவம், ஜெ.எம்.பாஞ்சால் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் இந்த உத்தரவை இன்று பிறப்பித்தது.
தேசிய மற்றும் சர்வதேச அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விவகாரங்களில், விதிவிலக்கான தருணங்களில் மட்டுமே மாநில அரசின் ஆலோசனையின்றி தனிச்சையாக நீதிமன்றங்கள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடலாம் என நீதிபதிகள் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.
இல்லையெனில் இதுபோன்ற உத்தரவுகளுக்காக ஏராளமான வழக்குகள் வரிசைகட்ட ஆரம்பித்துவிடும். அதனால் நியாயமான மற்றும் திறமையான விசாரணை நடவடிக்கைகள் பாதிக்கப்படக் கூடும் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.












Click it and Unblock the Notifications