எம்.பிக்களுக்கு நேரம் ஒதுக்கி மக்கள் பிரச்சினைகளைக் கேட்குமாறு அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுரை
டெல்லி: எம்.பிக்களுக்கு நேரம் ஒதுக்கி மக்கள் பிரச்சினைகளைக் காது கொடுத்து கேட்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், எம்.பிக்கள் உங்களை அணுகி அவரவர் தொகுதி பிரச்சினைகள் குறித்து உங்களிடம் தெரிவிக்க போதிய அவகாசம் கொடுங்கள்.
எம்.பிக்கள் எளிதில் உங்களை அணுகும் படி வைத்துக் கொள்ளுங்கள். தொகுதி பிரச்சினைகளை உரிய அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் கவனத்திற்குக் கொண்டு சென்று அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டிய கடமை எம்.பிக்களுக்கு உண்டு.
அவர்கள் தங்களது கடமைகளை செவ்வனே செய்வதற்கு மத்திய, மாநில அமைச்சர்களை சந்திக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது.
எனவே அனைத்து அமைச்சர்களும் தங்களை நாடும் எம்.பிக்களை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும்.
எனவே தங்களை சந்திக்க விரும்பி அமைச்சர்களை எம்.பிக்கள் அணுகும்போது இதை மனதில் கொண்டு செயல்படுவது நல்லது என்று கூறியுள்ளார் பிரதமர்.
தாங்கள் அமைச்சர்களை சந்திக்க நேரம் கேட்டும் கிடைப்பதில்லை, தங்களால் அமைச்சர்களை சந்திக்க முடிவதே இல்லை என்று பல்வேறு எம்.பிக்கள் பிரதமரிடம் குறைபட்டுக் கொண்டதைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தலை பிரதமர் பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications