மின் திருட்டு: ரூ.10 கோடி அபராதம் செலுத்திய தொழிற்சாலை
ஈரோடு: ஈரோடு அருகே உள்ள பிரபல தனியர் தொழிற்சாலை ஒன்று மின்சாரத்தை திருடிய குற்றத்திற்காக மொத்தம் சுமார் 10 கோடி ரூபாய் அபதாரம் செலுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள காவிலிப்பாளையத்தில் கடந்த ஆண்டு மே மாதம், பிரபல தனியார் ஸ்டீல் தொழிற்சாலை துவங்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக இந்த தொழிற்சாலையின் மின் பயன்பாடு குறைவாகவும், அதற்கான கட்டணம் செலுத்துவதும் குறைவாகவும் இருந்துள்ளது.
ஆனால், தொழிற்சாலை முழு அளவில் இயங்கும் நிலையில், மின் பயன்பாடு மட்டும் குறைவது குறித்து அதிகாரிகள் சந்தேகமடைந்து, தொழிற்சாலையின் மின் பயன்பாடு குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
அப்போது, மின்சார மீட்டரில் உள்ள, 'செகண்டரி டெர்மினலை' சேதப்படுத்தியதால், சிறு அளவு மட்டும் மின்சார மீட்டரில் பதிவாகியுள்ளதை கண்டறிந்தனர்.
இதனையடுத்து, திருடப்பட்ட மின்சாரத்திற்கு இழப்பீடாக எட்டு கோடியே 81 லட்சத்து 51 ஆயிரத்து 684 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
மின்சாரம் திருடிய தொழிற்சாலை நிர்வாகத்தினர் குற்றவியல் நடவடிக்கையைத் தவிர்க்க கோரியதால் அதற்கான சமரசத் தொகையாக ஒரு கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்தினர்.
இதனால் இந்த சம்பவம் குறித்து மின்துறை உயர் அதிகாரிகள் காவல்நிலையத்தில் புகார் செய்யப்படவில்லை என்று கூறப்படுகின்றது












Click it and Unblock the Notifications