விமான நிலையம்-ஷூவுக்குள் துப்பாக்கி-பாக். மாணவர் கைது
இஸ்லாமாபாத்: இங்கிலாந்து செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த மாணவர் தனது ஷூவுக்குள் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டார்.
துப்பாக்கி தவிர இரண்டு கத்திகளும் கூட அவரது ஷூவுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
அந்த மாணவரின் பெயர் அஸார் இக்பால். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோஹி ரத்தா என்ற இடத்தைச் சேர்ந்தவர்.
பாகிஸ்தான் சர்வதேச விமானம் மூலம் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகருக்குச் செல்வதற்காக ராவல்பிண்டியில் உள்ள பெனாசிர் பூட்டோ சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வந்தார்.
அப்போது அங்கு நடந்த ஸ்கேனிங் பரிசோதனையின்போது ஷூவுக்குள் துப்பாக்கியும், கத்திகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை விமான நிலைய பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
லக்கேஜ்களைக் கொண்டு செல்வதற்கான எடை அளவு கூடியதைத் தொடர்ந்து துப்பாக்கி, கத்திகளை ஷூவுக்குள் மறைத்து வைத்து வந்ததா இக்பால் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications